பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



போலியோவுக்கு விடை கொடுப்போம்

நம் நாட்டில் பெரியம்மை, பிளேக் போன்ற கொடிய நோய்களை முற்றிலும் ஒழித்தது போல, போலியோ நோயையும் ஒழிக்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரப் பிரச்சினை : கை, காலை ஊனமாக்கும் ஆற்றல் படைத்த போலியோ வைரஸ்ஸை, 2000-ம் ஆண்டுக்குள் உலகத்திலிருந்தே அறவே ஒழிக்க வேண்டும் என, 12 ஆண்டுகளுக்கு முன்பு, உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. இதை முன்னிட்டுப் போலியோ நோய் ஒழிப்பு முறைகள் உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டன. 156-க்கும் மேற்பட்ட மேலை நாடுகள் போலியோ நோயை ஒழித்து வெற்றி கண்டுள்ளன. ஆனால், இந்தியா, மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளில், போலியோ ஒரு சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

80 சதவீதக் குழந்தைகள் : உலகம் முழுவதும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்கு மட்டும், 80 சதவீதம் ஆகும். எனவே,