பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

45

நோவும் ஏற்படுவதுண்டு. இதேபோல் பெண் குழந்தைகளுக்கு சூல்பையில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று நோயை உண்டு பண்ணலாம். சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டு, இடுப்பில் வலி ஏற்படுவதும் உண்டு. பெண் குழந்தைகளுக்கும் மார்பகம் வீங்கி நோவு கொடுப்பதுண்டு. இவைகளைத் தவிரக் கணையம், மூளை, காது, கண், மூட்டுக்கள், இதயம், சிறு நீரகங்கள் போன்ற எந்த உறுப்பும் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடும். பீஜங்களை பாதிப்பதினால் நோயாளி பிற்காலத்தில் மலடாகப் போகலாம்.

சிகிச்சை : இதற்கென தனிப்பட்ட மருந்துகள் இல்லை. படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டும். வீக்கத்திற்குச் சூடான ஒத்தடம் போடவேண்டும். நோவு குறைய, ஆஸ்பரின் போன்ற மருந்துகள் ஏதேனும் கொடுக்கலாம். பிஜத்தில் வீக்கம் ஏற்பட்டால் அவைகளைப் பஞ்சினால் சுற்றி, வீக்கத்தின் கனம், அவைகள் மீது உறுத்தா வண்ணம் பாதுகாக்கவேண்டும். வீக்கம் குறைய ஐஸ் கட்டிகளை அவைகள் மீது வைக்கலாம். பிற்காலத்தில் இக் குழந்தைகள் மலடாகாதிருக்க முன் கூட்டியே இந்நோயின் போது டைஎதில் ஸ்டில்போஸ்டிரால் (Diety stiboestrol) எனும் மருந்தைக் கொடுக்கும் முறையைச் சில வைத்தியர்கள் கையாண்டு வருகின்றனர். நோயின்பொழுது வாயைச் சுத்தமாக அன்றாடம் கழுவி வரவேண்டும். நோயின் பொழுது பால், பார்லி, நீர், பழச்சாறு, போன்ற உணவைக் கொடுக்க வேண்டும். நோயினால் ஏற்படும் மற்றைய கோளாற்றிற்குத் தக்கபடி சிகிச்சை செய்வது முறையாகும். வீக்கம் வாங்கிய பின்பு, குழந்தை சுமார் மூன்று வார காலம் மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாதிருப்பது நோயைப் பாவாதிருக்கச் செய்யும் வழி.