இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
73
புட்டிப்பால் தரவேண்டிய நேரங்களும், பாலின் அளவுகளும் கீழே தரப்பட்டுள்ளன.
வயது | எத்தனை தடவை | தடவைக்குத் தரும் பாலின் அளவு | நாள் ஒன்றுக்கு மொத்தம் |
---|---|---|---|
3 நாள் | 6 | 1 அவுன்ஸ் | 6 அவுன்ஸ் |
4 நாள் | 6 | 1½ அவுன்ஸ் | 9 அவுன்ஸ் |
5 நாள் | 6 | 2 அவுன்ஸ் | 12 அவுன்ஸ் |
10 நாள் | 6 | 2½ அவுன்ஸ் | 15 அவுன்ஸ் |
3 வாரம் | 6 | 3 அவுன்ஸ் | 18 அவுன்ஸ் |
2 மாதம் | 6 | 3½ அவுன்ஸ் | 21 அவுன்ஸ் |
3 மாதம் | 6 | 4 அவுன்ஸ் | 24 அவுன்ஸ் |
4 மாதம் | 6 | 4½ அவுன்ஸ் | 27 அவுன்ஸ் |
5 மாதம் | 5 | 6 அவுன்ஸ் | 30 அவுன்ஸ் |
6 மாதம் | 5 | 6½ அவுன்ஸ் | 32½ அவுன்ஸ் |
7 மாதம் | 5 | 7 அவுன்ஸ் | 35 அவுன்ஸ் |
8 மாதம் | 5 | 7 அவுன்ஸ் | 35 அவுன்ஸ் |
9 மாதம் | 4 | 8 அவுன்ஸ் | 32 அவுன்ஸ் |
புட்டிப்பால் தரும் குழந்தைகட்கு எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி ஆகியவற்றில் ஒன்றின் சாற்றை வடிகட்டிச் சிறிது சர்க்கரையுடனும் கொதிக்க வைத்து, இளஞ்சூடாகவுள்ள நீருடனும் கலந்து, நாள்தோறும் ஒரு தடவை, உணவு கொடுக்கும் வேளைகளுக்கு இடையில், அதாவது மாலை 4 மணிக்குத் தருதல் நல்லது. பழச்சாற்றிலுள்ள வைட்டமின் தேவை. இரண்டு திங்கள் குழந்தைக்கு ½ தேக்கரண்டிச் சாறு, ஆறு திங்கள் குழந்தைக்கு 3 தேக்கரண்டிச் சாறு, ஓராண்டுக் குழந்தைக்கு 6 தேக்கரண்டிச் சாறு வீதம் தர வேண்டும். இவற்றிலுள்ள வைட்டமின் சி குழந்தைக்குப் பல் சரியான விதத்தில் உண்டாவதற்கும் உதவுகிறது.