பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ustolo. பண்பாட்டுத்தளத்தில் பாரதி அ. சீனிவாசன் வெந்து போக பகைமை பொசுக்குவான் பாரும் வானும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பம் கணத்திடை மாற்றுவான்' "சக்கரத்தை எடுப்பது ஒரு கணம் தருமம் பாரில் தளைத்தல் மறுகணம் இக்கணத்தில் இடைக்கனமொன்று உண்டோ? இதனுள்ளே பகை மாய்த்திட வல்லன் காண். கண்ணன் எங்கள் அரசன் புகழினைக் கவிதை கொண்டு வந்தக் காலமும் போற்றுவேன்" ான்று பாடிப் பரவசமைடைகிறார். 'திண்ணை வாயில் பெருக்க வந்த என்னை தேசம் போற்றத் தன் மந்திரியாக்கிக் கொண்டான். நித்தம் சோறினுக்காக ஏவல் செய வந்தேன். ாக்கு நிகரிலாப் பெரும் செல்வம் கொடுத்து உதவினான். வித்தை நன்கு கற்பதற்காக எனக்கு வேத நுட்பம் விளங்கிடச் செய்தான். அத்தகைய என் கண்ணபிரான் அருள் வாழ்க, கலியழிந்து, புவித்தலம் வெல்க,"அண்ணலின் அருள் நாடிய நாடு தன் அவலம் நீங்கிப் புகழில் உயர்க" என்று கண்ணனை வழிபாடு செய்து போற்றுகிறான் பாரதி. "எவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒருங்க நின்ற பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி' என்று நம்மாழ்வார் பாடுகிறார். கண்ணன் - என் சீடன் பாரதி, கண்ணன் என் சீடன் என்னும் கவிதையில் யானேயாகி என்னலாற் பிறவாய்யானும் அவனுமாய் இரண்டினும் வேறாய்யாதோ பொருளாம். மாயக் கண்ணன் என்று மாயக் கண்ணனைத் தனது சீடனாக வரித்துப் பாடுகிறார். ான்னை விட அறிவினிற் குறைந்தவன் போலவும், என்னால் மேம்பாடு ாய்தலாம் போலவும் என் கவிதை பெருமையுடையன எனக் கருதுவான் போலவும், கண்ணன் என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தனன் என்று கூறுவது பாரதியின் கவியுள்ளம். "...----------- இந்த சகத்திலே உள்ள மாந்தர்க்கு உள்ள துயரெலாம் மாற்றி d;3 இன்பத்தி ருத்தவும் எண்ணிய குற்றத்திற்காக, எனக்கு தண்டனை கொடுப்பதற்காக என்னைப் பலவாறு புகழ்ந்து எனது கவிதைகளை வியந்து என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தான்." கண்ணனைச் சீடனாகக் கொண்டு அவனுக்கு பாரதி அறிவுரை போதித்தாகக் கூறுகிறார். அக்கண்ணனை, "உயர்நிலைப் படுத்தலில் ஊக்க மிக்கவனாய் இன்னது செய்திடேல், இவரொடு பழகேல் இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல் இன்னது கற்றிடேல், இன்ன நூல் கற்பாய் இன்னவர் உறவு கொள் இன்னவை விரும்புவாய், எனப் பல தர்மம் எடுத்தெடுத்தோதி ஓய்விலாது அவனோடு உயிர் விடலானேன்" என்று பாரதி தொடங்குகிறார். கண்ணன் சீட வடிவத்தில் இந்த பூமியில் உள்ள பல கோடிக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொன்றின் பால பருவ வடிவங்களாக இங்கு காட்சியாகக் காட்டப்படுகிறார். இளம் பருவத்தில் உள்ள ஒரு சீடனின் குண இயல்புகளை பாரதி இங்கு தனது கவிதையில் வடித்துக் காட்டியுள்ளார். நமது இல்லத்தில் உள்ளது நமது சிறுவன் சுட்டித்தனம், ஓயாத ஆற்றல், ஓடி விளையாடும் உரம், எதற்கும் கவலைப்படாத, யாருக்கும் கட்டுப்படாத உள்ளமும் துடிப்பும் கொண்டவன். கதையில் வரும் கணவன் சொல்வதற்கெல்லாம் எதிர்ச் சொல் கூறும் மனைவி போல கண்ணன் 'நான் காட்டும் நெறியினுக் கெல்லாம் நேர் எதிர் நெறியே நடப்பானாயினன்' என்று பாரதி குறிப்பிடுகிறார். வித்தையில் விருப்பம் இல்லாதவனாய், கல்வியிலே கவனம் இல்லாதவனாய், நல்ல பல செயல்களிலே நாட்டமில்லாதவனாய், வேளா வேளைக்கு உணவருந்தாமல் ஊர் சுற்றித் திரிந்து கொண்டு வரும் கண்ணனை எல்லோரும் ஏளனம் செய்தனர். கிறுக்கன் என்று கூறிச் சிரித்தனர். அதைக் கேட்ட போது அச்சொற்கள் எனது நெஞ்சை அறுத்தன. எனது உள்ளம் வெதும்பிற்று. "முத்தனாக்கிட நான் முயன்ற தோர் இளைஞன், பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என் நெஞ்சினை அறுத்தது என்று கவலை