பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் சொல்வாரோ வல்லவன் வென்றிடுவான்-தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான்' என்றெல்லாம் கேலியாகவும் கிண்டலாகவும் பழைய பழக்க வழக்கங்கள் என்றும் வாடிக்கை என்று சகுனி பேசினான். முன்பிருந்த பழக்கம் என்பதை பாரதி மிக வலுவாகச் சாடுகிறான். முன்பிருந்த வழக்கம் எனக்கருதி தருமன் சூதாடஇணங்கி விட்டான். "பொய்யதாகும் சிறுவழக்கொன்றைப் புலனில்லாதவர் தம் முடன் பாட்டை ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்' என்பதை தருமன் சூதாட இணங்கியதை எத்தனை கடுமையாக பாரதி சாடியுள்ளான் என்பதை அவனுடைய அடுத்தகவிதை வரிகளில் காணலாம். அப்பாடல் வரிகளில் பாரதி கூறும் கருத்துக்கள். பாரதிக்கே உரிய தனித்தன்மையான, அதே சமயத்தில் மரபுவழியிலான கருத்துகளும் ஆகும். அக்கருத்துகள் நமது பண்பாட்டுத் தளத்தின் அதன் மேம்பாட்டின் அடிநாதமாகும். "முன்பிருந்தோர் காரணத்தாலே மூடரே, பொய்யை மெய்யெனலாமோ முன் பெனச் சொலுங் கால மதற்கு மூடரே ஒருவரையறையுண்டோ? முன்பெனச் சொல்லின் நேற்று முன்பே யாம், மூன்று கோடி வருடமும் முன்பே முன்பிருந்த தெண்ணிலாது புவிமேல் பொய்த்த மக்கள் எல்லாம் முனிவரோ?" "நீர் பிறக்குமுன் பார்மிசை மூடர் நேர்ந்ததில்லையென நினைந்தீரோ? பார்பிறந்தது தொட்டு இன்று மட்டும் பலபலப் பல பற்பல கோடி கார் பிறக்கும் மழைத்துளி போல், கண்ட மக்கள் அனைவருள்ளேயும் நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை யிருந்தனவன்றோ? 5s) பொய்யொழுக்கை அறமென்று கொண்டும். பொய்யர் கேலியை சாத்திர மென்றும், ஐயகோ, நங்கள் பாரத நாட்டில் அறிவிலார் அறப்பற்று மிக்குளோர் நொய்யராகி அழிந்தவர் கோடி" என்று தனது வலுவான கருத்துகளைக் கூறி மேலும் கதையைத் தொடர்கிறார். 'நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் மெய்யறிந்தவர் தம்முள் உயர்ந்தோன் விதியினால் அத்தருமன் வீழ்ந்தான்" என்றும் தர்மன் மீது சற்று பரிதாபப்பட்டும் பாரதி குறிப்பிடுகிறார். தர்மன் சூதாட்டத்தில் நாட்டைப் பணயமாக வைத்து இழந்தான். இந்த நிகழ்ச்சியைக் கதையில் கூறும் போது பாரதிக்கு ஏற்பட்டிருந்த கோபத்திற்கு அளவேயில்லை. பாரதம் அடிமைப் பட்டிருந்த நிலையும் அன்னியா ஆட்சியின் கொடுமையும் பாரதியின் கண்களுக்கு முன்பு வந்து நிற்கிறது. "கோயிற் பூசைசெய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன்- வீட்டை வைத்திழத்தல் போலும், ஆயிரங்களான - நீதி அவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான் - சிச்சி சிறியர் செய்கை செய்தான்' என்று பாரதி கூறுகிறார். அப்போது அவருடைய அரசியல் நெறி பற்றிய கருத்தும், தேசபக்தியும், மக்களாட்சி உணர்வும் மேலோங்கி நிற்கிறது. ஒரு வீட்டிற்கு வாயில் காப்போனாக இருப்பதைப் போல நாட்டிற்குக் காவலனாக அரசன் இருக்க வேண்டும் என்று இங்கு பாரதி கூறும் கருத்து நமது நாட்டின் மரபு வழி வந்த அரசியல் நெறியாகும். மன்னன் உடம்பென்றும் மக்கள் உயிரென்றும் கம்பன் கூறிய புதுமைக் கருத்தும் இங்கு கவனிக்கற்பாலதாகும் பாரதி மேலும் கூறுகிறார். "நாட்டு மாந்தர் எல்லாம்-தம்போல் நரர்கள் என்று கருதார்