பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி நூபு சீனிவாசன் கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம்- அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே எண்ணத்தில் அடங்காவே. அவை எத்தனை எத்தனை நிறத்தனவே." 'பொன்னிழைப் பட்டிழையும்- பல புதுப் புதுப் புதுப் புதுப் புதுமைகளாய் சென்னியிற்கை குவித்தாள்- அவள் செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே முன்னிய ஹரி நாமம்-தன்னில் மூளு நற்பயனுலகறிந்திடவே துன்னிய துயிற் கூட்டம்-கண்டு தொழும்பத்துச்சாதனன் வீழ்ந்து விட்டான்" "தேவர்கள் பூச் சொரிந்தார்- ஓம் ஜெய ஜெயபாரத சக்தி யென்றே ஆவலொழுந்து நின்று-முன்னை ஆரிய வீட்டு மன் கை தொழுதான்" "சாவடி மறவர் எல்லாம்- ஓம் சக்தி சக்தி சக்தியென்று கரங் குவித்தார் காவலின் நெறி பிழைத்தான்-கொடி கடியரவுடையவன் தலை கவிழ்ந்தான்" என்று பாஞ்சாலியின் வேண்டுதலை அக்குரல் கேட்டுக் கண்ணன் காட்டிய கருணையை மிகவும் அற்புதமான கவிதை வரிகளில் பாரதிநமக்குப் படைத்தருளியுள்ளார். வீமனும் வில் விஜயனும் வீர பாஞ்சாலியும் கண்ணன் ஆணையாகச் சபதம் ஏற்றனர். பாரதப் போர்க்களத்தில் அச்சபதங்கள் நிறைவேறின. பாரதி கண்ணனைப் பற்றிப் பாடியுள்ள பாடல்கள் அற்புதமானவை. பக்திச் சுவை மிக்கவை. அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள் நிறைந்தவை. பாரதப் பண்பாட்டு தளத்தில் வேரூன்றியுள்ளவை. அவை தனி இலக்கியமாக அமைந்திருக்கின்றன. 를 3. வரலாற்றுச் சிறப்புமிக்க பேரறிஞர்கள், ஞானிகள், பெரியோர்கள் பற்றி பாரதி இந்திய நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து இப்பாரம் பரியங்களையும் மரபுகளையும் தொடர வேண்டும் என்பதைப் பாரதி தனது பாடல்களில் சுட்டிக் காட்டுகிறார். இதில் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரிய மரபுகளுக்குத் தனி இடம் இருப்பதையும் காணலாம். ஆதி சங்கரரும், இராமானுஜரும் மத்துவரும், கம்பரும், வள்ளுவரும், இளங்கோவடிகளும், காளிதாசனும், ஆரியபட்டனும் பாஸ்கரனும், புத்தனும், ஒளவையும், அகத்தியரும், பாணினியும், சேர, சோழ, பாண்டியர்களும், சிவாஜியும், குரு கோவிந்தரும், தாயுமானவரும், வள்ளலாரும் பாரதியின் கவிதைகளில் நாம் காணும் வாழையடிவாழையாக வந்த வழிகாட்டிகளாகும். "புத்த பகவான்- எங்கள் புத்த பகவான் - அவன் சுத்த மெய்ஞ்ஞானச் சடர் முகம் கண்டேன்" என்று பொன் மரத்தின் கீழ் சின்மயமானதோர் தேவன் புத்த பகவானைக் கண்டேன் என்று பாரதி பாடுகிறார். வானில் பறக்கின்ற பறவைகள், மண்ணில் திரியும் விலங்குகள், கானில் வளரும் மரங்கள், காற்று, புனல் கடல், விண்ணில் தெரியும் மீன்கள், வெட்ட வெளியின் விரிவு, மண்ணில் கிடக்கும் புழுக்கள், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் நான் என்று கூறும் பாரதி "கம்பன் இசைத்த கவியெலாம் நான் காருகர் தீட்டும் உருவெலாம் நான்" என்று பாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம் நீதி நெறியினில் நின்று பிறர்க்குதவும் நேர்மையவர் மேலவர், கீழவர் மற்றோர்" என அவ்வை கூறிய சொற்களை நினைவூட்டி பாரத தேச மக்களுக்கான ஒரு புதிய திட்டத்தை பாரதி முன்வைக்கிறார். ஆழ்வார்கள், ஆண்டவனுக்கு அரங்கனுக்கு பள்ளியெழுச்சி பாடினார்கள். அந்த மரபில்துக்கத்தில் இருந்த பாரதநாட்டு மக்களைத்தட்டிஎழுப்ப, பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியைப் பாடினார். அப்பாடல்களில் புதிய {#1