பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி - அ சீனிவாசன் கருத்துக்களை முன் வைத்தார். "சுருதிகள் பயந்தனை, சாத்திரங் கோடி சொல்ல ருமாண் பின ஈன்றனையம்மே." என்றும், "விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுனைப் பாடுதும் காணாய்" என்றும் குறிப்பிட்டு நாட்டின் பெருமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்திப் பாடுகிறார். தமிழ்நாடு பற்றிய பாடல்களில் பாரதி தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளைப் பற்றியும், வளத்தைப் பற்றியும், சேர,சோழ, பாண்டிய மன்னர்களின் சிறப்பான ஆட்சி முறைகளைப் பற்றியும் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகளின் தனிச்சிறப்புகளைப் பற்றியும் பெருமைப்படுத்திப் பாடுகிறார். "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதி துள்ளிக் குதித்துப் பாடத் தொடங்குகிறார். "வேதம் நிறைந்த தமிழ் நாடு' என்றும் "உயர் வீரம் செரிந்த தமிழ் நாடு" என்றும் "காவிரி தென் பெண்ணெய், பாலாறு தமிழ் கண்ட தோர் வைகைப் பொருனை நிதி-யென மேவிய ஆறு பல ஒட-திரு மேனி செழித்த தமிழ் நாடு" என்றும் நாட்டு வளத்தையும் சிறப்பையும் குறித்துப் பாடுகிறார். தமிழ் கண்ட வைகையும், பொருனையும் என்பது தனிச் சிறப்பாகும். வைகையும் பொருனையும் நாட்டை மட்டும் வளப்படுத்தவில்லை. தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையும் தமிழின்பம் வளர்த்த பொதிகையும், வைகை பொருனை நதிகளுடன் இணைந்த பெருமை கொண்டதாகும். இன்னும் செல்வம் எத்தனையுண்டு புவி மீதே, அவையாவும் படைத்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டின் செல்வ வளத்தை உச்சத்தில் வைத்து பெருமைப்படுத்தி பாரதி பாடுகிறார். "கல்வி சிறந்த தமிழ் நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு' என்றும் "வள்ளுவன்தன்னை உலகினுக்கே-தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம்படைத்த தமிழ் நாடு" என்றும், தமிழ்நாட்டின் கல்விச்சிறப்பையும் அறிவுச் சிறப்பையும் புகழ்ந்து பாடுகிறார். தமிழ்த் தாய் தனது மக்களைப் புதிய சாத்திரங்களைப் படைக்குமாறு கூறுவதாக பாரதி பாடியுள்ள பாடல், தமிழ்நாட்டு மக்களுக்குப் புதிய கடமைகளை நிறைவேற்ற ஆணை பிறப்பித்ததைப் போல அமைந்துள்ளது தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் காட்டி பாரதி தனது காலத்திய அவல நிலையைக் கவலையுடன் சுட்டிக் காட்டி எதிர்காலத்தில் உயர்வடைய ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துக் காட்டுகிறார். "ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே- நின்ற மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் மூன்று குலத்தமிழ் மன்னர்- என்னை மூண்டநல்ல அன்பொடு நித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளில் உள்ளே - உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்' என்று தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் காட்டிக் கவிதையைத் தொடங்குகிறார். "சாத்திரங்கள் பல தந்தார்- இந்த தரணியெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்" என்று பண்டயச் சிறப்பையும் சுட்டிக் காட்டி, "தந்தை அருள் வலியாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கன மட்டும் காலன்- என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்" என்று கூறி, இப்போது ஒரு வசைச் சொல் வந்துள்ளது. அதை நீக்கித் தமிழை மேன்மையுறச் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகிறான்