பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதத்தை விடு!

தெருவறைச் சன்னல் தன்னைத் திறப்பாள்.என் வரவு பார்ப்பாள். திருமுகம் காண்பேன், முல்லைச் சிரிப்பினிற் சொக்கி நிற்பேன். ஒருநொடி தனிலே அன்னாள் ஒளிமுகம் மறைந்து போகும்; அரிவையின் முகநிலாவை அடுத்தநாள் காண்பேன் அங்கே!

நடந்தது நாள் ஒவ்வொன்றாய்! நகர்ந்தன நான்கு திங்கள்! மடமயில் தனை நெருங்கும் வாய்ப்பில்லை. பேச்சும் இல்லை அடைந்தேன்இன்றவள் வரைந்த அழகிய "காதல் அஞ்சல்” 'அடைகளின் வீட்டைக், காலை ஐந்தரை மணிக்கு நீவிர்”

அஞ்சலைப் படித்தான்் பாரி, அற்றைநாள் இரவு தன்னைக் கேட்கவே இல்லை அஃது; மிஞ்சுகாலணிகள் பூண்ட மெல்லிபோல் மெதுவாய்ச் செல்லக், கொஞ்சிற்றுப் பரிதி கீழ்பால்; கொடியிடை வீடு சென்றான்.