பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பாரதிதாசன்

மாக் *

அப்பரே நீர்ஒர் அறிஞரென எண்ணுகின்றேன், ஒப்பார் இலாத உயர்புலவர் நீர்போலும் உம்மைநான் கேட்பதெலாம் ஒன்றுதான்் என்னவெனில் கைம்மேற் கனிபோல் கடவுளைநீர் காட்டிடுவீர் உம்போன்றார் இந்த உலகில் கடவுளை எம்போன்றார் காண எதிரினிலே காட்டினராம். நானும்என் காதலியாம் நங்கையும் காணும்வகை ஆனதுசெய்தால் அதுபோதும்போதும்.

தாடி கடவுளைநான் உங்கட்குக் காட்டல் எளிதே நடையுலகில் நீங்களது நம்பல் அரிதாகும், கோயிலி னுள்ளே குருக்கள்மார் காட்டுகின்ற தூய உருவங்கள் கல்தச்சர் தோற்றுவித்தார், கண்டீர் அவைகள் கடவுள்கள் அல்லஅல்ல. குண்டான் பெருவயிறு கொண்டிருக்கும் ஓர் உருவம் ஆறுமுகம் ஐந்துமுகம் நாலுமுகம் ஆகுமென்று கூறுமுகம் யாவும் கடவுளெனக் கூறாதீர். இந்துமதம் சொல்லுகின்ற யாதும் கடவுளல்ல, பிந்திவந்த ஏசுமதப் பேறும் கடவுளல்ல, ஒதுநபி காட்டும் ஒலியும் கடவுளல்ல, எவ்வுருவும் எப்பெயரும் இல்லை கடவுளுக்கே. அவ்வியமோ பற்றோ கடவுள் அடைவதில்லை ஊருக்குழைக்கும் உணர்வே கடவுள் ஆம். ஊருக்குழைக்கும் உணர்வை உம் முட்கண்டீர் கண்டீர்நீர் அந்தக் கடவுளையே மெய்யாகக் கண்ட கடவுள்தான்் காட்டியதோர் இன்பத்தைப்

பெற்றீர் அதைவிளக்கிப் பேசுகின்றேன் கேட்டிடுவீர்: