பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாரதிதாசன்

உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும் வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!

எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்் உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்

நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம் ്ധങ്ങളേr@lങ്ങ്ண நினைப்பையகற்றிவிடு! நாயென்று எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு: வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே! பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!

கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே, போபோ மறைந்துவிடு:

காதல் நெருப்பால் கடலுன்மேல் காவிடுவேன் சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ!

பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால் நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்? கொஞ்சு தமிழ்தேன் குடித்துவிட அட்டியில்லை அஞ்சு வ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே? ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக் காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?

பட்டாளிச் சக்கரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்பு கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?

என்றழுதான்் விம்மி இளையான் கவியரசன், குன்றும் இரங்கும், கொடும்பாம்பும் செஞ்சிளகும்!