பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 29

'காரிருளால் சூரியன் தான்் மறைவதுண்டோ?

கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான்் இன்மை யாமோ?

பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ? நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்

நிறைதொழிலாளர்களுணர்வு மறைந்து போமோ? சீரழகே தீந்தமிழே உனைஎன் கண்ணைத்

திரையிட்டு மறைத்தார்கள்! என்று சொன்னான்.

"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும் மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க

ஆனந்தத் தென்றல்வந்தாரத் தழுவுவதும் நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ? $

சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக் கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,

சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,

உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான்் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!

குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற் பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?”

என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல் சென்றுதன் தஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!

நன்று மடமயிலே! நான்பசியால் வாடுகின்றேன், குன்றுபோல் அன்னம் குவிந்திருக்கு தென்னெதிரில்