பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாரதிதாசன்

அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை;

அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்! சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்

தோகையவள் என்காதல்துரையே கேளாய்! எவையும் நம்மைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோம்;

இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்

நற்பாடம் கற்பியா திருப்பதில்லை.

இருந்திங்கே அநீதியிடை வாழவேண்டாம்!

இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்! பருந்தும், கண்மூடாத நரியும், நாயும்,

பலிபீடவரிசைகளும் கொடுவாள் கட்கும் பொருந்தட்டும்; கொலை செய்யும் எதேச்சை மன்னன் பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை அருந்தட்டும்! என்றாள். காதலர்கள் சென்றார்;

அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக்கின்றேன்:

கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகாரங்கள் கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்; அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி

அனைவருமே வந்திருந்தார். உதாரனுக்கும் சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசியாகச்

சிலபேச்சுப் பேசிடுக' என்று சொல்லித் தலைப்பாகை அதிகாரி விடைதந்திட்டான்;

தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான் :

பேரன்பு கொண்டவரே, பெரியோரே,என்

பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!

நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்

நிறைந்து பெருங் காடாகப், பெருவி லங்கு