பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 39

நேரோடிவாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்

நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்

போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்

புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி!

சிற்றுாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு

தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும்

நிறையுழைப்பு தோள்களெலாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான்் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி

அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்! இக்கால நால்வருணம் அன்றிருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவதன்றிப் புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்

புனலுக்கும் அனலுக்கும் சோற்றி னுக்கும் கக்கும்விஷப் பாம்பினுக்கும் பிலத்தி னுக்கும்

கடும்பசிக்கும் இடையறா நோய்களுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்

பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்

சலியாத வருவாயும் உடையதாகத்

s : . §

磁*

தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின்றார்கள்!

ஏமாந்தந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?