பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரதிதாசன்

அரசனுக்கும் எனக்கும் மொரு வழக்குண்டாக

அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்பதேதான்் சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும்

சாவதென்றே தீர்ப்பளித்தான்், சாக வந்தோம்! ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! இருவர் இதோ சாகின்றோம். நாளை நீங்கள்

இருப்பதுமெய் என்றெண்ணி இருக்கின்றீர்கள்!

தன்மகளுக்கெனை அழைத்துக் கவிதை சொல்லித்

தரச்சொன்னான், அவ்வாறு தருங்காலிந்தப் பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால்

புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்! என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன்

எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த மன்னுடல்வெட்டப்படுமோர் மாபழிக்கே

மனநடுக்கங் கொள்ளுகின்றேன். இன்னும் கேளிர்!

'தமிழறிந்ததால் வேந்தன்எனை அழைத்தான்்;

தமிழ்க்கவியென் றெனை அவளும் காதலித்தாள்! அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ், என்னாவி

அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ என்

தாய் மொழிக்குப் பழி வந்தால் சகிப்பதுண்டோ? உமைஒன்று வேண்டுகின்றேன். மாசில் லாத

உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!

அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை

ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல

அரசனுக்கோ அதிகாரம் உங்களுக்கோ?

அவ்வரசன் சட்டத்தை அவமதித்தான்்!