பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாரதிதாசன்

தாங்காத வருத்தத்தால் விஜய ராணி தனியாக எமக்கெல்லாம் எழுதியுள்ள தீங்கள்ற சேதியினைச் சொல்வோம். கேளும்! திருமுடியை நீர்கவர, அரசருக்குப் பாங்னைப்போல் உடனிருந்தே மதுப்பழக்கம் பண்ணிவைத்தீர்! அதிகாரம் அபகரித்தீர்.

மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும் மறைவாக வசிக்கின்றார் அறிந்து கொள்ளும்! கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன் கல்வியின்றி உணவின்றி ஒழுக்கமின்றி ஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர் உம்எண்ணம் இருந்தபடிஎன்னே! என்னே! ஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன் ஆயகலை வல்லவனாய் விளங்குகின்றான்.

வள்ளிநாட்டு மன்னன் : (இடைமறுத்து உரைக்கின்றான்.)

சுதர்மனை நாம்கண்ணால் பார்க்க வேண்டும். சொந்தநாட்டார்எண்ணம் அறிய வேண்டும். இதம் அதிகம் தெரியாமல் உம்மை நாங்கள் எள்ளளவும் ஆதரிக்க மாட்டோம் கண்டீர்!

கொன்றைநாட்டுக் கோமான் : (கோபத்தோடு கூறுகிறான்.)

சதிபுரிந்ததுண்மையெனில் நண்பரே, நீர் சகிக்கமுடியாததுயர் அடைய நேரும்.

குன்றநாட்டுக் கொற்றவன் : (இடியென இயம்புவான்.)