பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 53

அதிவிரைவில் நீர்நிரபராதி என்ப - தத்தனையும் எண்பிக்க வேண்டும்; சொன்னோம்!

சேனாபதி : . * (பயந்து ஈனசுரத்தோடு.)

அவ்விதமேயாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச் செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று.

காட்சி - 8

(சேனாபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத்தைத் தெரிவித்து வருந்துவான்.)

சேனாபதி:

வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை தரைமட்ட ஆயினதா? அந்தோ! தனிமையிலே ராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சிதனைக் காண இதயம் கலக்கம் அடைந்திடுதே! வேந்தன் மகனுக்குவித்தையெல்லாம் வந்தனவாம் ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றுாரில் போதித்ததார்? இதனைப் போயறிவோம் வாவா வா!!

மந்திரி :

பொக்கிஷந் திறந்தஅந்தப் புலனுறு பெரியார் எங்கே? அக்கிழவர்பால்இந்த அசந்தர்ப்பம் சொல்லிக் காட்டி தக்கநல்லறிஞரின்றித்தரணியும் நடவாதன்றோ!