பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் வாழ்வும்

"வாழ்வின் உண்மைத் தன்மையினை வெளிப் படுத்துவதில் உள்ள இலக்கியத்தின் முதன்மையான நோக்கத்தைக் காணும்போது, அதில் ஒரு தனிப் பண்பு இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அது இல்லாமல் இலக்கியம் எந்த வகைத் திறமை களும் பெற்றதாக, அதாவது உண்மை நிறைந்ததாக இருக்க முடியாது” என்பார் உருசியப் பேரறிஞர் நிகலோய் தோப்ரோ லியுயோவ்.

சிறுகதை, நெடுங்கதை, காவியம் என எல்லா இலக்கிய வகைக்கும் பொருந்தும் மேற்கூறிய கருத்து. மேலைநாட்டில் கதைப் பாடல்கள் (STORY POEMS) புகழும் சிறப்பும் பெற்றவை. வாழ்வொழுங்கு வேரும்விழுதுமாய் விளங்குபவை.

பின்னர் நாட்டுப்புறப் பாடல்களாகச் சில புலவர்களின் பெயரால் வெளிவந்த, 'அல்லி அரசாணி மாலை முதல் பவளக்கொடி மாலை வரை - ஒரளவு வரலாற்று உண்மைகளை உட்கொண்ட கற்பனைப் பாடல்களே.'

இருபதாம் நூற்றாண்டில் கதைப் பாடல்கள் தோன்றியதில் பாரதியின் 'குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், இரண்டுக்குப் பின்-பாரதிதாசன் மிகுதியாகக்