பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள்

உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி!

(இருவரும் சிரிக்கிறார்கள்.)

ஆந்தைபோல் விழிந்தான்்.அடங்காச்சிரிப்பை நமக்குப் பெண்ணே நல்விருந்தாக்கினான்.

(இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.)

6

வீரம்

காதலன்

என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்? கால்பட்டுச் சருகு கலகல என்றது.

(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)

எவனோ உறையினின்றுருவினான் வாளை, ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே! ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய். நினது தந்தை நீள முடி மன்னன் அனுப்பிய மறவன் அவனே போலும்!

(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை

உற்று நோக்கியிருக்கிறாள்.)

காதலன்

(தன்னெதிர் நின்ற மறவனை நோக்கி)

அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ?