பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாரதிதாசன்

முரசு முழங்கும் முன்றிலுக்கப்பால் அரண்மனை புனைந்த அழகு மாடியில் வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்ததுஇத்தோள் உணைஇங்கெதிர்ப்பதும் இத்தோள்! போர்மறவர்சூழ் பாரே எதிர்ப்பினும் நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்! உறையி னின்று வாளை உருவினேன். தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான். என்னையும் என்பால் அன்புவைத் தாளையும் நன்று வாழ்த்திநட, வந்தவழி இலை.எனில் சும்மா இராதே, தொடங்கு போர்! (வாட்போர் நடக்கிறது.) மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்; வாழி தோழா நின்பெயர் வாழி! (வந்தவன் இறந்துபடுகிறான்)

- 7

அச்சம் (காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.) காதலன் அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே? பெருவாய் வாட்பல் அரிமாத்தின்றதோ! கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச வஞ்சக் கள்வன் மாய்த்திட்டானோ?

(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும் அவன் பார்வை சுழல்கின்றது.)

8

அவலம்

(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகின்றான்.)