பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 73

வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன் வாணிகன் கூலியாள்வாசன் என்பது: ஒருநாள் வாசன் பெருங்குடிவெறியால் நாயைக் கடித்தான்். நாயும் கடித்தது. நஞ்சேறியதால் நாய்போல் குரைத்தே அஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே இரண்டு நாளின்முன் இறந்து போனான். ஒலை வந்தது காலையில் கையில்கேட்டாலுஞ்சரி விட்டாலுஞ்சரிஇரண்டனாக் காசும் இல்லை மெய்யாய்! இந்நேர மட்டும் ஏதோதோ நான் தில்லு முல்லுகள் செய்து பார்த்தேன். யாரும் சிறிதும் ஏமாற வில்லை. உங்களிடத்தில் ஓடிவந்தேன். சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன்; முன்நடந்தவைகளை முதலில் சொல்வேன்; ஐயா இதுஓர் ஆணின் சாதகம்.

வெள்ளையப்பன் :

ஆமாம் அடடா ஆமாம் மெய்தான்்!

புரோகிதன் :

ஆண்டோ இருபதாயிற்றுப் பிள்ளைக்கு ளபையனோ நல்ல பையன். அறிஞன். ஈன்றதாய் தந்தை இருக்கின்றார்கள். உங்களுக் கிவனோ ஒரே பையன்தான்். பையன் தந்தை பலசரக்கு விற்பவர் தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது.