பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாரதிதாசன்

மாப்பிள்ளளை பார்க்க எப்போது வருவார்?

வெள்ளையப்பன் விள்ளுகிறான் :

காலையில் வருவார் கட்டாய மாக.

காட்சி - 5

மாப்பிள்ளை பார்த்தல் (விரசலூர் வெள்ளையப்பனும் இரிசனும் பேசுகிறார்கள்)

வெள்ளையப்பன் :

வருக வருக இரிசப்பனாரே! அமர்க அமர்க அந்தநாற் காலியில்! குடிப்பீர் குடிப்பீர் கொத்தமல்லி நீர்! வீட்டில் அனைவரும்மிகநலந்தான்ே? பிள்ளைகள் எல்லாம் பெருநலந்தான்ே? என்மகன் இந்த எதிர்த்த அறையில் படித்திருக்கிறான் பார்க்கலாமே. இரிசன் இயம்புகிறான்:

பையன் முகத்தைப் பார்க்க வேண்டும். பிள்ளையாண்டானொடு பேச வேண்டும். இங்கே இருங்கள் யான்போய்ப் பார்ப்பேன்.

(நல்லமுத்துவும் இரிசனும் பேசுகின்றார்கள்.) நல்லமுத்து :

யார் நீர் ஐயா? எங்கு வந்தீர்? ஊர்பேர் அறியேன் உள்வரலாமா? அப்பா இல்லையா அவ்விடத்தில்?

இரிசன் : -

அப்பா முந்தாநாள் அரசலூர் வந்தார்.