பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் T9

அப்படியே என்அம்மாக் கண்ணு! சொற்படிநடப்பேன் சொற்படி நடப்பேன்.

காட்சி - 4

பெண் எப்படி?

விரசலூர் வெள்ளையப்பன் மனைவி மண்ணாங்கட்டிக்குக் கூறுகிறான்:

நல்ல உயரம் நல்ல கட்டுடல் நல்ல பண்பு நல்ல சிவப்பே எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம்: செல்லாக் காசும் செலவில்லை நமக்கே! அனைத்தும் அவர்கள் பொறுப்பே ஆகும். மணமகள் வீட்டில் மணம்வைத்துள்ளார்.

மண்ணாங்கட்டி :

சாதியில் ஏதும் தாழ்த்தி யில்லை! சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை! ஏழு பெண்களில் இவள்தான்் தலைச்சனோ? எப்படியாகிலும் இருந்துபோகட்டும். பெண்கள் ஏழுபேர் பிறந்தனர், ஆணோ பிறக்க வில்லை, பெரிய குறைதான்். எப்படியாகிலும் இருந்து போகட்டும். எழுபது காணி நஞ்செய் என்றால் பையனுக்குப் பத்துக் காணிதான்்! எழுபதாயிரம் இருப்புப் பணமா? பையனுக்குப் பதினாயிரம் வரும். எப்படியாகிலும் இருந்து போகட்டும்!