பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள்

எதற்கு வந்தார்? அதுதெரியாதா? நல்லமுத்து :

அசரலூர் சென்றார் அப்பா என்றால் அறியேன், ஏனதை அறிய வேண்டும்? இரிசன் :

திருமணம் உனக்குச் செய்ய எண்ணினார்; அதற்காகத்தான்் அங்கு வந்தார். உன்பெயர் என்ன? உரைப்பாய் தம்பி! நல்லமுத்து :

என்பெயர் நல்லமுத் தென்றிசைப்பார். இரிசன் :

என்ன படிக்கிறாய் இந்நேரத்தில்! நல்லமுத்து :

காலே அரைக்கால் கம்பராமாயணம். இரிசன் :

காலே அரைக்கால் கம்பராமாயண நூலும் உண்டோ? நுவலுகதம்பி! நல்லமுத்து :

சிதம்பர நாதர் திருவருளாலே அரையே அரைக்கால் அழிந்தது போக, மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன் காலே அரைக்கால் கம்பராமாயணம் அச்சிடப்பட்டதை அறியீரோ நீர்?