பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 87

தங்கள் பெண்ணைத் தருவது நல்லது. வைத்த நாளில் மணத்தை முடிக்கலாம். என்னசொல் கின்றீர் இரிசப்ப னாரே?

இரிசப்பன் :

அம்மாக் கண்ணை அறிவேன் நானும் வெள்ளையப்பரே வீண்பேச் செதற்கு? நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை.

காட்சி - 8

வலையில் சிக்கினார் கணவர்

(இரிசப்பன் மண்ணாங்கட்டியிடம் வந்து கூறுகிறான் :)

நல்ல முத்து நல்ல பிள்ளை. நீங்களும் மிகவும் நேர்மையுடையவர். வெள்ளையப்பர் மிகவும் தீயவர். அரச லூரில் அம்மாக் கண்ணின் வலையிற் சிக்கி வாழுகின்றார்; அங்கேயே அவர் தங்கி விட்டார். இன்னும் இங்கே ஏன் வரவில்லை? மான மிழந்து வாழுகின்றார். அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்! மணம் வேண்டாமென மறுத்தான்ாம்மகன்! நேரில் உம்மிடம் நிகழ்த்த வந்தேன்.இதை. உங்கள் கருத்தை உரைக்க வேண்டும்.

மண்ணாங்கட்டி :

கெடுத்தாளாளன் குடித்தனத்தை? விருந்து வைத்து மருந்தும் வைத்தாள்;