பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

________________

1.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்


குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு
பூக்கள் மணங்கமழும்; பூக்கள் தோறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;
வேட்டுவப் பெண்கள் விடையாடப் போவதுண்டு;
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு,
நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்.
          
                * * *
         
சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஒர் நாளில்
கொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே
குப்பன்எனும்வேடக்குமரன் தனியிருந்து
செப்புச் சிலைபோல தென்திசையைப் பார்த்தபடி
ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின்,
வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான்.
வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச்
சுரக்கின்ற காதலொடு சென்றான் - “தொடாதீர்கள்"
என்று சொன்னாள் வஞ்சி. இளையான் திடுக்கிட்டான்.

              * * *

குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்;
“கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோடு
உண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்!