பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாரதிதாசன்

சோற்றைப் போட்டு மாற்றினாள் மனத்தை! ஏமாந்தாரா என்றன் கணவர்? போய்ப் புகுந்தாராபுலியின் வாயில்? எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை வேண்டாமென்று விளம்பவில்லையே! அவள் மகனுக்கே அவளைக் கட்ட இப்படிஎல்லாம் இயம்பினார் போலும்! மாதம் ஒன்றாகியும் வரவில்லை அவர். மகனை இங்கே வரவழைக்கின்றேன். சொல்லிப் பார்ப்போம்; சொன்னாற் கேட்பான். (நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும் சொல்லுகிறார்கள்.)

மண்ணாங்கட்டி :

ஒருமாதமாக உன்றன் தந்தையார் அரச லூரில் அம்மாக் கண்ணிடம் விளையாடு கின்றார். வீட்டை மறந்தார். அவர்தாம் அப்படி ஆனார். உன்றன் திருமணம் பற்றிய சேதி எப்படி? இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்; உடனே மணத்தை முடிக்க வேண்டும்.

நல்லமுத்து :

அப்பா இல்லை. அது முடியாது. விவாக முகூர்த்த விளம்பரத்தில் அப்பாகையெழுத்தமைய வேண்டும். பாத பூசை பண்ணிக் கொள்ள அப்பா இல்லை! எப்படிமுடியும்? திருமண வேளையில் தெருவில் நின்று வருபவர் தம்மை வரவேற்பதற்கும்