பக்கம்:பாரதித் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


மான சான்று கிடைக்காமையாலும் அவை முதல் முதலாக வெளிவந்த பழம் பத்திரிகைகளை நான் பார்க்க முடியவில்லை யாதலாலும் அவற்றை இத்தொகுதியில் சேர்க்க விரும்பவில்லை.

பழைய சுதேசமித்திரனிலும்கூட வேறு புனைபெயர்களில் வந்துள்ள ஒரு சில கட்டுரைகள் பாரதியார் எழுதி யவைதாமோ என்று ஐயுறும்படி உள்ளன. ஆனால் நிச்சய மாகத் தெரியாததால் அவற்றை நான் பிரதி செய்யவில்லை. இன்னும் ஊன்றிப் பார்த்திருந்தால் ஒரு சிலவாவது கிடைத்திருக்கும்.

இதுவரை நான் செய்த முயற்சி எனக்கு முழு மனநிறைவை அளித்திருப்பதாக யாரும் நினைக்கக்கூடாது. தமிழுக்குப் புத்துயிர் தந்த கவிஞரின் எழுத்தை ஒன்று விடாமல் தொகுத்து வெளியிட வேண்டும் என்றும், அவரது எழுத்துத் திறமையின் வளர்ச்சியைக் காலக் கிரமத்தில் ஆராய்ந்து புதுமுறையிலே வாழ்க்கை வரலாறும், இலக்கியத் திறனாய்வும் எழுத வேண்டும் என்றும் நான் கொண்டுள்ள ஆசையை ஓரளவிற்கே இங்கு நிறைவேற்றியிருக்கிறேன். இந்தியா, ஞானபாநு, சக்ரவர்த்தினி, தேச பக்தன், லோகோபகாரி முதலான பல பத்திரிகைகளின்-பழம் பிரதிகளை இன்னும் நன்றாக ஆராய வேண்டும். சுதேசமித்திரனில் வெளியான கட்டுரை கவிதைகளின் தேதியைக் குறித்து வைத்திருந்தது போலவே கவிதைகள் சிலவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகளையும் குறித்து வைத்திருந்தேன். உதாரணமாக பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் என்ற பாடலைப் பாடுவதற்குத் தீனபந்து ஆண்டுரூஸ் எழுதிய கட்டுரையொன்று காரணமாக அமைந்தது. தீனபந்து பிஜிக்குச் சென்று அங்கு இந்தியப் பெண்களின் நிலைமையை நேரிற் கண்டறிந்து அதுபற்றி மாடர்ன் ரெவியூ பத்திரிகையில் உருக்கமாக எழுதினார். அதைப் படித்த பாரதியார் அப்பாடலை இயற்றினார். இந்த விவரம் அப்பாடல் வெளியான காலத்திலேயே அதனடியில் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு குறித்து வைத்திருந்த காவிய நூல் கை நழுவி விட்டதென்று முன்பே குறித்திருக்கிறேன். அந்த விவரங்களை மீண்டும் சேகரித்தால் பாரதியாரை இன்னும் நன்கு அறிந்து அநுபவிக்க உதவியாகவிருக்கும்.

பாரதியாரும், வ.வெ.சு.ஐயரும் சேர்ந்து ரவீந்திரநாத டாகுரின் சிறு கதைகள் பலவற்றை அழகாக மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/14&oldid=1539724" இலிருந்து மீள்விக்கப்பட்டது