பக்கம்:பாரதித் தமிழ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தி தர்மம்

சக்திதாலன் 5 ஆகஸ்டு 1916 தள ஆடி 22

கடவுளே ஆ.ெ ண ன் று ம் பெண்ணென்றும் இரண்டு கலைகளாக வழங்குதல் புராதன தேசங்கள் யாவற்றிலுமே உண்டு. சிலவிடங்களில் சக்தியே பிரதானமென்று கொள்கையிருந்தது.

உதாரணமாகக் கிறிஸ் துநாதரின் மாதாவுக்கு “மாரி என்று பெயர். (இதனை ஆங்கிலேயர் மேரி என்று பிழையாக உச்சரிக்கிறார்கள்.) இந்த மாரி யென்னும் பெயர் பாலஸ் தின தேசத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் எத்தனையோ நூற்றாண்டுகளாக வழங்கிவந்தது. அங்கு மாத்திரமன்று, அங்கிருந்து வடக்கே நெடுந்துாரம் கருங்கடல்வரையிலுமுள்ள நில முழுவதிலும் மிகவும் பழமைக் காலங்களிலே 1 மாரி’ என்பதோர் தெய்வப் பெயர் வழங்கிற்று. கருங்கடலுக்கும் தர்தாநெல் (இங்கிலீஷ்-டார்ட னெல்ஸ்) ஜல சந்திக்குமிடையே ("லங்கரியுஸ்” என்று கிரேக்க பாஷையில் சொல்லப்படும்) சங்கரி ந திக் கரையில் முற்காலத்திலே பிஸ்கேனு(Piscenus) எ ன்றதோர் பெரிய நகரமிருந்தது. அங்கு பெருங் கோயிலொன்று கட்டி மாரியம்மா’ என்ற தெய் வத்தை வணங்கினர்கள். அதற்கருகே மாரியாந்தினி என்றாேர் நகரிருந்தது. இந்த மாரியை உலகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/203&oldid=605500" இலிருந்து மீள்விக்கப்பட்டது