பக்கம்:பாரதித் தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சக்தி தர்மம்

207


முதலிய புறமதங்களிலும் நமது தேசத்து மதங்கள் சிலவற்றிலும், பிற்காலத்துப் பாதிரிகளும் பக்கிரிகளும் பிக்‌ஷுக்களும் ஸந்நியாசிகளும் ஒரே முழக்கமாக லெளகிக ஞானத்தையும், லெளகிக அனுபவத்தையும் பழிக்கத் தொடங்கி விட்டார்கள். சக்தி தர்மம் சிலவகையான வார்த்தைக்கே இடங்கொடுக்காது. ஏன் ?
 பராசக்தியை முதலாவது இவ்வுலகத்திலே கண்டு வணங்குதல் வேண்டும்; நகத்திரங்கள் எல்லாம் அவளுடைய விழிகள்; தியும் காற்றும் அவளுடைய வேகம் : மண் அவளுடைய திருமேனி ; இருப்பதெல்லாம் அவளுடைய கலைதான்; அவளே இகத்திலே கண்டு போற்றி நலம் பெறவேண்டும்.
 குறிப்பு:- இதே தலைப்பில் 24-7-1916-ல் மற்றாெரு கட்டுரை வெளியாகி யிருக்கிறது. அது மட்டும் பாரதி நூல்கள் மூன்றாம் தொகுயில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை அதில் சேரவில்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/206&oldid=1539925" இலிருந்து மீள்விக்கப்பட்டது