பக்கம்:பாரதித் தமிழ்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206 பாரதி தமிழ்

யறிந்தோம்? உலகமிருப்பதாலே அறிந்தோம். தெய்வம் உயிர் ; உலகம் அதன் வடிவம். உலகம் தெய்வந்தான். உலகத்துச் செய்கைகளெல்லாம் தெய்வத்தின் செய்கைகளே. உலகத்தின் நடை களிலும் விதிகளிலும் தெய்வத்தை உணரவேண்டும். இந்த வழியறியாதோர் உலகத்துக்குப் பயப்படு கிரு.ர்கள். இவ்வுலகத்தைவிட்டுத் தப்பினுல் இன்ப முண்டாகுமென்று நினைக்கிறார்கள். அதிலிருந்து பல்வேறு பிழைகளும் தொல்லைகளும் விளைகின்றன. இந்த உலகம் நாராயணனுடைய லிலே. அவன் தனது சக்தியுடன் விளையாடும் விளையாட்டு. சக்தி மார்க் கத்தில் இந்த உலகத்து ஞானம் அதிகப்பட வேண்டும். பராசக்தி தெய்வம். ஆத்மஞானத்தைக் காட்டும் நூல்கள் அவளுடைய வேதம். லெளகிக சாஸ்திரமும் அவளுடைய வேதத்தான். பெளதிக சாஸ்திரம் (ஸயன்ஸ்) சக்தி தர்மத்துக்கு முதலாவது வேதம் - வேதாரம்பம். ஸ்தூலத்தை அறிந்தா லொழிய ஸஅகமத்தை நன்கு தெரிந்து கொள்ள முடியாது. இஹலோக ஞானத்தை இகழ்ச்சியாகப் பேசும் “ஆத்ம சாஸ்திரம்” பொய். உண்மையான ஆத்ம சாஸ்திரம் இஹலோக ஞானத்தை வளர்க்கும். வான சாஸ்திரம் இல்லாத நாட்டில் ஞான வாசிட்டம் பயன் தரமாட்டாது. எந்த மதமும் ஆரம்பத்தில் லெளகிக ஞானத்தை இகழவில்பே. எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டு எப்போதும் சிவனைத் தியானம் செய்துகொண்டிருந்தால் சிவன் கோயில் கட்டியிருக்க முடியாது : ஒரு வேலையும் நடக்காது. கண்ணைத் திறந்து உலகக் காரியங்கள் செய்துகொண்டே சிவனை அறிய முயல்வதுதான் சரியான ஞானம். எல்லா மதங்களிலும் இதுதான் உண்மை. உள்ளத் துறவுடன் இன்பங்களைத் துறந் திடுக என்று ஈசோபநிஷத்துக் கூறுகின்றது. ஆனல் கிறிஸ்து மதம், மகம்மதிய மதம், பெளத்த மதம்