பக்கம்:பாரதித் தமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதி

சக்திதாஸன்

9 செப்டம்பர் 1916 நள ஆவணி 25

விதி மூன்று வகைப்படும் :

1. தெய்வ விதி 2. சாஸ்திர விதி 3. நாட்டு விதி

தெய்வ விதி

இந்த மூன்றிலே தெய்வ விதியை மாற்ற முடியாது. காற்றிலே வீசிய கல் இடையிலே தடுக்கா விட்டால் மண் மேலே வந்து விழும் : தீ சுடும் ; பனி குளிரும். மின்னல் அழிக்கும். வெயில் ஒளி செய்யும். இவற்றைப் பிற விதிகளால் சிறிது நேரம் தடுத் தாலும் தடுக்கலாம். இயற்கை விதிகளை மாற்றிவிட வழியில்லை. நன்மை நினைத்தால் நன்மை விளையும். தீமை நினைத்தால் தீமை விளையும். பொய் இழிவு தரும். உண்மை கைதுாக்கும். இவை மாருத விதிகள். இக்காலத்து இயற்கை விதிகளை ஒன்றாென்றாக ஆராய்ந்து கண்டுபிடித்துப் பின் அவற்றை அனு சரித்து வாழவேண்டும். இந்த விதிகளில்ே மனித ஜாதியார் இன்றுவரை, “கற்றது கைமண்ணளவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/207&oldid=605506" இலிருந்து மீள்விக்கப்பட்டது