பக்கம்:பாரதித் தமிழ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிப் பாங்கு

காளிதாஸன்

2 பிப்ரவரி 19 17 நள ைத 21

இங்கிலாந்திலுள்ள ந்யூ ஸ்டேட்ஸ்மன்’ என்ற பத்திரிகையில் டிெ தேசத்துக் குடியுரிமைக் காப்பு மஹாசபையின் கிளேயாகச் சேர்ந்த வியாபார ஐக்யப் பகுதிச் சங்கத்தின் கெளரவ காரியதரிசி ஒரு கடிதமெழுதி யிருக்கிரு.ர். அதில் ஒரு பகுதி இங்கு மொழி பெயர்க்கப்படுகிறது. டிெ மஹா சபையின் நோக்கங்கள் என்னவென்றால் :

1. 1916-ஆம் வருஷத்து ராணுவச் சேவக விதிகளை நீக்கிவிடும்படி வேலை செய்வதும், நமது (ஆங்கிலேய)ஜாதிக்கு ராணுவச் சேவகம் எப்போதும் கட்டாயமாகாதபடி தடுப்பதும்;

2. சொல்லுரிமை, குடிவிசாரணை (படை விசாரணை யல்லாதது) முதலிய ப்ரிடிஷ் ஜாதி யாரின் மற்றக் குடியுரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளுதல்;

3. குடி விடுதலைக்கு இடர் விளைவிக்கக்கூடிய ராணுவச் சேவகச் சட்டம், பூமி ரக்ஷணைச் சட்டம் முதலிய சட்டங்களின் அமுலைக் கவனித்துக் கொண்டு வருதல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/238&oldid=605554" இலிருந்து மீள்விக்கப்பட்டது