பக்கம்:பாரதித் தமிழ்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸத் திரட்கு

காளிதாஸன்

19 நவம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 5

‘ ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்.’

இந்த மாதிரி தர்ம ஸ்மாசாரங்களைக் கொஞ்சம் மறை பொருளாக மூடின பாஷையில், சற்றே இரண் டர்த்தம் தோன்றும்படியாகப் பேசுவது இதுவரை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் போன்ற “ராடிகல்’ (வேர்த்திருந்த) ராஜ தந்திரிகளின் வழக்கமாக இருந்தது. அதிலும், அமெரிக்காவிடம் யுத்த ஸமயத்தில் ஏராளமாகப் பணம் கடன் வாங்க வேண்டியிருந்தபடியாலும், மற்றபடி ஆஹார வஸ் துக்கள், ஸேனைக்கு வேண்டிய பண்டங்கள், மனித பலம் முதலிய வ்ேறு பல உதவிகளும் அவசியமாக இருந்தபடியாலும், விடுதலை விஷயத்தில் ஏராளமான பக்தி, ஆவேசம் காட்டுவதும், விடுதலை மறுப்புக் கொள்கைகளை மிகவும் ஜாக்கிரதையான, இரண்டு பொருளுடைய, மொழிகளில் மறைத்துச் சொல் வதும் ஆங்கில மந்திரிகளுக்கு அவஸரமாகவும் இன்றி யமையாதன ஆகவும் ஏற்பட்டன. இப்போது சண்டை முடிந்துவிட்டது. அமெரிக்கா மேலே கடன் கொடுக்கக்கூடிய மனமில்லாது போய்விட்டது

பா. த.-23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/352&oldid=605737" இலிருந்து மீள்விக்கப்பட்டது