பக்கம்:பாரதித் தமிழ்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 பாரதி தமிழ்

புலப்படுகிறது. இத்தருணத்தில் விரைவிலே இந்தியா எங்ஙனமேனும் தன் ஸ்வதந்த்ரத்தை உறுதி செய்து கொள்ளுதல் அதன் கடமையாம். இதுவே, நமது தேசத்தில் பொதுஜனங்களின் மனதில் எப்போதும் விடாமற் பற்றியிருக்கும் பேராவலாகிவிட்டது. அது பற்றியே, மஹாத்மா காந்தி கேட்டபோது, ஜனங்கள் சிறிதேனும் லோபத்தன்மையின்றித் தங்கள் அளவிறந்த வறுமையையும் பாராட்டாமல், பணத்தை யதேஷ்டமாகவும் விரைவாகவும் கொடுத் துத் தங்கள்மீது பழிச் சொல்லுக்குச் சிறிதேனும் இடமின்றிச் செய்து கொண்டார்கள்.

ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய் விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப் பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலே வர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டிய தைத் தவிர வேருென்றும் இல்லை.

நாம் இங்ஙனம் எழுதிக்கொண்டு வருகையிலே, பூரீமான் ராஜ்கோபாலாசார்யர் ஒரு கணக்கு ப்ரசுரம் செய்திருக்கிரு.ர். அதில் சென்னை மாகா ணத்து வசூல் எவ்வளவென்பதையும் அதில் செலவம் சங்கள் எவையென்பதையும் விவரித்துக் கணக்குகள் தெரிவிக்கிறார், அதில் மிகவும் சொற்பமான தொகை யொன்று சுமார் (50,000 ரூபாயென்று நினைக் கிறேன்) ப்ரசாரச் செலவுக்காகப் போடப்பட்டிருக் கிறது. இந்த ரூபாய் போதாதென்பது என்னுடைய அபிப்ராயம். ப்ரசார விஷயத்தில் இந்தியா முழு தையும் ஒன்றாகப் பாராட்ட வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே திட்டம், ஒரே முறைமை, ஒரே ப்ரசார ஸங்கம் தலைமையாக இருந்து இந்த ஸ்வ ராஜ்ய ப்ரசாரத்தை நடத்தி வராவிட்டால் நமக்கு எண்ணிறந்த ஸங்கடங்கள் விளையும். “கர்மம் உனக் குரியது; நீ பயனைக் கருதுதல் வேண்டா” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/509&oldid=605981" இலிருந்து மீள்விக்கப்பட்டது