பக்கம்:பாரதித் தமிழ்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ரவீந்திர திக் விஜயம் 515

அதன் பொருட்டாக நம் ரவீந்த்ரரிடம் அளவிறந்த மதிப்புச் செலுத்துவதுமன்றி அபாரமான நன்றியும் செலுத்துகிறது.

ஆஸ்த்ரியா தேசத்தில் பாரத கவிராஜ ரவீந்த்ர ருக்கு நடந்த உபசாரங்கள் வர்ணிக்கத் தக்கன அல்ல. 1921 ஜூன் 26-ஆந் தேதியன்று, லண்டன் “அப்ஸர்வர்’ பத்திரிகையின் வியெந்நா நிருபர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

“வியெந்தா நகரத்துப் பொதுஜனங்களாலும் பத்திராதிபர்களாலும், ஒருங்கே இத்தனை ஆழ்ந்த பக்தி விரத்தைகளுடனே, இத்தனை ஒருமனமான புகழ்ச்சி வந்தனைகளுடனே நல்வரவேற்கப்பட்டோர் வேறெவரும் கவிகளிடையேயுமில்லை, பெரிய பெரிய ராஜ்ய தந்த்ரிகளிடையேயுமில்லை, வீர லேனுதிபதி களிடையேயு மில்லை; மன்னர்களிடையேயு மில்லை” என. ஆஹா இஃதன்றாே கீர்த்தி. இதனைக் குறிப்பிட் டன்றாே, முன்பு திருவள்ளுவனரும். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார்,

தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தி யொரு கீர்த்தியாகுமா? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்த்ரநாதர் இந்தியாவை பூலோக குரு வென்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி மலர்கள் வாழ்க.

இந்தியாவின் ஞானேப தேசமாகிய அமிர்தத் துக்கு, ஐரோப்பாவில் உயர்ந்த தரத்து மேதாவிகள் எத்தனை வேட்கையுடன் காத்திருந்தன ரென்பது மேலே கூறிய ஆஸ்த்ரிய நிருபரின் கடிதத்திலே மற்றாெரு பகுதியில் பின்வரும் வசனத்தாலே நன்கு விளக்கப்படுகின்றது:-"இந்த நூற்றாண்டின் சிதறு பட்ட குழந்தைகளாகிய நாம் (ஐரோப்பியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/514&oldid=605990" இலிருந்து மீள்விக்கப்பட்டது