பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uwéds a-swpo-ideo ewoluso leipno zgoguëzqbżgyżser--et *sforzen 95

வகையில் உற்பத்திப் பெருக்கத்திற்குத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்.

கல்வியைப் பெருக்க வேண்டும். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும். இன்னும் அதில் குறையிருப்பது, கல்லாமை நீடிப்பது அவமானம். அனைவருக்கு ஒன்பதாண்டு கல்வி கட்டாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். உயர் கல்வி, தனிக்கல்வி, தொழில் மற்றும் தொழில் நுட்பக்கல்வி, விஞ்ஞானம், விஞ்ஞானத் தொழில் நுட்பக்கல்வி, ஆராய்ச்சி மேம்பாட்டுக் கல்வி, முதலிய உயர் கல்வியில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

ஆட்சி நிர்வாகம், கிரிமினல், சிவில் சட்டங்கள், காவல் துறை, நீதித்துறை முதலியவைகளில் பழைய ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சட்டங்களை விதி முறைகளை நீக்கி, மாற்றி புதிய ஜனநாயக முறையில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்,

நமது தேசிய மொழிகளை வளர்த்து மொழி வழி கல்வியைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நாட்டின் சகல துறை வளர்ச்சியை முன்னேற்றத்தையும் மேம்படுத்தி பாரதி கூறிய வையத் தலைமை கொள் என்னும் லட்சியத்தை நிறைவேற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். பாரதத்தின் அடையாளத்தை உலகரியச் செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரம்பரியமான கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும். நமது ஆலயங்களை சீரமைக்க வேண்டும். சிதைந்து போன ஆலயங்களை பழுது பார்த்து புதுப்பிக்க வேண்டும். தேவைப்படும் புது ஆலயங்களை நிர்மாணிக்க வேண்டும். பூசைகள், விழாக்கள், திருவிழாக்கள் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.