பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyL LLLLLL LL TCy MM LLYLLLLLL000LLLSK SLLLLLS 000

இருக்கிறதோ இல்லையோ, நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ இல்லையோ பாதி ஆட்டத்தில் வயிற்று வலி வந்து விடுமோ என்னவோ, இன்னும் பார்வையாளர்கள் ஆட்டத்தை நன்கு ரசிப்பார்களோ இல்லையோ, கைதட்டு கிடைக்குமோ? கிடைக்காதோ?” என்று சித்தம் குழம்பிப் போயிருந்தால் ஆட்டம் நேராக வராது” என்று கூறுகிறார்.

வேலை உயர்வு, இட மாற்றம் விடுமுறை, பிரயாணப் படிக் கணக்கு மேல்வரும் படி வட்டிக் கணக்கு, கிரிக்கட் ஆட்டம், சீரியல் ஒட்டம் - இவ்வாறு பல சிந்தனைகளும் இருந்தால் வேலை ஒடாது.

இன்னும் பல சேவைத்துறைகளிலும் அரசு அலுவல -கங்களிலும் வேலைக் குறை ஏற்படுமானால் அது நேரடியாக மக்களை பாதிக்கும். அத்துடன், லஞ்ச நோய் பெரு நோயாக அரசாங்கத் துறைகளிலும் அரசியலிலும் வேறு பல துறைகளிலும் பல மட்டங்களிலும் பரவியுள்ளது. இதில் மேல் மட்ட லஞ்சம் நாட்டின் வளர்ச்சியை, பாதிக்கும். நடு மட்ட லஞ்சங்கள் மக்கள் நலனை பாதிக்கும். அதிலும் காவல் துறையிலும் வருவாய்த் துறையிலும் வரித்துறைகளிலும் வளர்ச்சித் துறைகளிலும் பரவி ஆழ வேர் விட்டுள்ள லஞ்சங்க்ள் சமுதாயத்தைப் புற்று நோய் போல் பாதிக்கிறது. -

உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல. எல்லாவகை உழைப்பும் உழைப்பேயாகும். அறிவு உழைப்பும் தொழில் உழைப்பும், தொழில் நுட்பத் துறையும், நிர்வாகம், வைத்தியத் தொழில், இசை, பாட்டு, ஆடல், பாடல், கவிதை இயற்றுதல், படித்தல், கற்றல் கற்பித்தல் ஆராய்ச்சி, மேல் பார்வை முதலிய அனைத்துப் பணிகளும்

உழைப்பேயாகும்.

XX XX XX