பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTL LSLLLLLLSLLL STLLLL LLLL LLLLLLLLTTTAyLSK SS LLLLLLLL LL

ஏற்படுகிறது. இவைகளை ஞானத் தீயில் சுட்டெரித்து விட வேண்டும். இந்த ஞானத்தைப் பெறுவது எப்படி? அதற்கு யக்ஞம், வேள்வி தவம் முயற்சி, கடும் உழைப்பு தேவை. நாம் எந்தத் தொழில் செய்தாலும் செய்து கொண்டிருந்தாலும் எங்கு நாம் இருந்தாலும் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அந்த முயற்சிகளில் ஈடுபடலாம். அதற்கான சிந்தனை பற்றி பாரதி கூறுகிறார்.

“எல்லாம் ஈசன் செயல் எல்லாம் அவனுடைய ரூபம். கம்ப ராமாயணத்தில் இரண்யனுக்கு பிரஹ்லாதாழ்வான் உப -தேசித்தருளிய படி அவன்,

"சானிலுமுளன், மற்றாங் கோர் அணுவினைச் சத கூறிட்ட கோனிலும் உளன்! மாமேருக் குன்றிலும் உளன், இந்நின்ற துரனிலும் உளன், யான் சொன்ன சொல்லினும் உளன்”

அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. அவனன்றி ஓரணுவும் அசையாது. ஆதலால் இந்த உலகம் முழுவதும் பரிபூரண அழகுடையது. பரிபூரண மங்களத்தன்மை உடையது. அந்தக் கடவுள் சர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலே சொல்லியபடி எல்லாப் பொறுப்புகளையும் அவன் பாதங்களிலே சுமத்தி விட்டு நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன் வாழும் படியாக நாம் மனதைத் திருத்திக் கொள்ளக் கடவோம் என்னும் துணிவே ஞானத்தீ என்று சொல்லப்படும். இது வேதாக்கினி.

இங்ங்ணம் நிச்சயிக்கப் பட்ட கடவுளிடத்தும் அவனுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும் தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப் படும். இந்த பக்திதான் முடிவான சாதனம்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.