பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT L TTT LL TTTLLy LLTTT LLLLLLTTTALLLLLSAAAAAAS LLLLLL 109

கடவுளின் எண்ணிறந்த குண இயல்புகளை தனித்தனியாக ஒருமுகப்படுத்தி அவைகளை உருவகப் படுத்தி புராணங்கள் எழுதப் பட்டன. பரமாத்மாவின் முக்கியமான மூர்த்தி பேதங்களை அதாவது குண பேதங்களை சிறப்பாகக் காட்டுவதற்காக சில தேவர்களை மேம்படுத்திக் காட்டி மக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்கப் புராணங்கள் எழுந்தன. ஆனால் கால நடையில் இப்புராணங்களை ஆதாரமாகக் கொண்டு மத பேதங்கள் நமது நாட்டில் ஏற்பட்டு விட்டன” என்று பாரதி குறிப்பிடுகிறார். அதனால் வைதீக மதத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டு விட்டன. அதில் ஏற்ற தாழ்வுகளும் ஏற்பட்டு விட்டன. துரஷனைகளும் சண்டைகளும் ஏற்பட்டு விட்டன. வேத ஒளி மறைந்தது. இந்த அலங்கோலங்கள் எல்லாம் தீர்ந்து ஹறிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி ஹறிந்துக்கள் ஒன்றுமையும் வைதீக ஞானமும் எய்தி மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆச்சார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் நாம் கீழ்க்கண்ட உபாயங்களைக் கையைாள வேண்டும்” என்று பாரதி கூறுகிறார்.

1. வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள், இவற்றை இக்

காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

2. புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப் படுத்தும்

அம்சங்களையும் மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸ்னை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களை மாத்திரமே பிரமாணமாகக் கொண்டு இதர தேவ துரஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமி ல்லாதனவென்று கழித்து விட வேண்டும்.

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸ்மரஸ்

ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாசங்கள் முதலியவற்றால் பிரம்மாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும்.