பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-இந்துக்களின்டஒற்றுமை TTO

ஹிந்துக்களே பிளவுண்டு மடியாதீர்கள் வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்” என்று பாரதி கூறுகிறார். இங்கு பாரதி நமக்கு முன்பாக மூன்று கடமைகளை நிறைவேற்றும் படி எடுத்துக் கூறுகிறார்.

ஹிந்துக்களே, பிளவுண்டு போகாதீர்கள். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள் என்று பாரதி கூறுகிறார். ஹிந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஹிந்துக்களின் ஒற்றுமை என்பது, இந்திய மக்கள் அனைவரின் ஒற்றுமைக்கும் அதாவது பாரத மக்கள் அனைவரின் ஒற்றுமைக்கும் அடிப்படையாகும். வழி பாடுகளில் ஆசாரங்களில் சிலவேறுபாடுகள் இருந்த போதிலும் தேசத்தால் பண்பாட்டால் கலாச்சாரத்தால் பழக்க வழக்கங்களால் நடை உடை பாவனைகளால் வரலாறு பூர்வமாக ஒன்று பட்டவர்கள் ஒன்றிணைந்தவர்களாகும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அந்த அன்னிய ஆட்சிக்கெதிராக, சுதந்திரம் கோரி, இந்திய மக்கள் ஒன்று பட்டு நின்று போராடிய காலத்தில், இந்திய மக்களுடைய பாரத மக்களுடைய ஒற்றுமை ஜாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து இந்திய மக்களுடைய ஒற்றுமை வலியுறுத்தப் பட்டது. இதைக் கண்டு அன்னிய ஆட்சியாளர்கள் பயந்து, இந்திய மக்களை மத வேறுபாடுகளை வைத்துப் பிரித்தாள்வதற்கு முயன்றார்கள். இஸ்லாம் மதத்தவரும், கிறிஸ்தவ மதத்தவர்களும் வெளியிலிருந்து வந்த மத வழிபாடுகளைத் தழுவிய இந்திய மக்கள் என்னும் முறையில் அவர்களை அரசியல் பூர்வமாகவும் மத ரீதியிலும் பிரிப்பதற்கு அன்னிய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். அதில் முஸ்லிம் தனி அரசியல் அமைப்பாக உருவாகி அகில இந்திய முஸ்லிம் லீக் என்னும் பெயரில் முஸ்லிம்கள் தனி தேசம் என்று கூறி இரு தேசக் கொள்கையை உருவாக்கி நாட்டைப் பிரிவினை செய்வதற்குக்