பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கொள்கையும் செய்கையும் 122

உலகில் ஒவ்வொருவரும் தனக்கொரு கொள்கையை உடையவராக இருக்க வேண்டும். ஒரு நியாயம், ஒரு தர்மம், ஒரு மதம் ஆகிய ஒன்றில் விசேஷப்பற்று கொண்டிருக்க வேண்டும். கொள்கையில்லாதவன் மனிதப் பதர் என்பது பாரதியின் கருத்து.

அவர் காலத்தில் விவசாயிகள் தங்கள் சாகுபடித் தொழிலைச் செய்வதில் உள்ள கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தெளிவாக உள்ளம் நெகிழும் படி பாரதி எடுத்துக் கூறுகிறார். ஒரு விவசாயி, தான் செய்யும் தொழிலில் நஷ்டப்பட்டு அதைச் செய்ய முடியாமல் கொள்ளை, வழிப்பறித் தொழிலுக்கு மாறுவதாகக் கூறுகிறார். இந்த சொற்கள் விவசாயத் தொழிலில் உள்ள கஷ்டங்களின் தீவிரத்தை கொடுமையான துன்ப துயரங்களை எடுத்துக் காட்டுகிறது.

போலீஸ்காரர்களும், திருடர்கள் மற்றும் கொள்ளைக் கூட்டத்தாரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்ளும் கொடுமையைப் பற்றிக் கூறுகிறார். இது ஒரு நிஜமான செய்தியாகும். இப்படிப் பட்ட ஒரு காவல் துறையை வைத்துக் கொண்டுதான் நாட்டு மக்களை அச்சுறுத்தி ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை நீடித்துக் கொள்ள விரும்பினார்கள் என்று தெரிகிறது.

அந்நிய ஆட்சியின் வரிக் கொடுமைகளை அவலச் சுவையுடன் சுட்டிக் காட்டுவது நமது உள்ளத்தை உலுக்குகிறது. நமது சிந்தனையைக் கிளறுகிறது. அந்நிய ஆட்சியின் வரிக் கொள்கை முறைதான் தொடர்ந்து நீடிக்கிறது. நமது நாட்டின் வரிக் கொள்கை முறையை மாற்றியமைத்திட வேண்டும் என்பது பல அறிஞர்கள் அனுபவசாலிகளின் கருத்தாக உள்ளது.