பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TLLLL LLLLLL LL LLL LLLLL LL LLLTT LLLSK LLL 000

கொள்கை என்றால் என்ன என்பது பற்றி பாரதி ஒரு நல்ல விளக்கத்தைக் கொடுக்கிறார். கொள்கைக்கும் செய்கைக்கும் இருக்க வேண்டிய இணைப்பைப் பற்றிக் கூறுகிறார்.

வெறும் கொள்கையைக் கூறி ஏமாற்றுபவர்களைச் சாடுகிறார். ஏமாறுபவர்களையும் கண்டனம் செய்கிறார். பாரதியார் தன் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மிதவாதிகளையும், நடிப்பு சுதேசிகளையும் மனதில் வைத்து இதை எழுதுகிறார் போலும். பாரதியாருடைய இந்தக் கருத்துக்கள் இக்கால போலி அரசியல் வாதிகளுக்கும் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளுக்கும் கொள்கை அறிவிப்புகளுக்கும் பொருந்தும்.

கடைசியாக நாம் சுதந்திரம் பெறுவதற்காக அத்தனை தியாகங்களையும் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்ச்சியூட்டுகிறார். நமது நாட்டின் விடுதலைக்காகப் போராடுவது மட்டுமல்ல. உலகில் அடிமைப்பட்டுள்ள நாடுகளெல்லாம் சுதந்திரம் பெறுவதற்கு பாரதம் பாடுபட வேண்டும் என்றும், உலகம் முழுவதும் விடுதலை பெற்று ஒரு சுதந்திர உலகம் ஏற்படவேண்டும் என்று பாரதி அழுத்தமாகக் கூறுகிறார். இந்தக் கட்டுரைக்காகப் பாரதியைப் பல முறை பாராட்ட வேண்டும். பாரதி வாழ்க.

xx xx xx