பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLLLL LLLLLL LLLL LLLLLL LLLLLL LLLLLLLLTTTLLLLSSSLL LLLLLS 000

ஜில்லாவைச் சோதனை செய்த சர்க்கார் அதிகாரியான ஓர் ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில் ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதயை, அதிதீசத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்த இரவில் சில வைதீக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடம் கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள் - நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம், பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்காாச்சாரியாருக்கு சமத்துவ ஞானத்தை ஊட்டினார். பூரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும் படி கட்டளையிட்டருளினார்.

சந்திரனில் ஒரு களங்கம், ஆனால் தீர்க்கக் கூடியது.

சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பது போல் இப்போது நமது கூட்டத்தில் ஒரு களங்கம் இருக்கிறது. ஆனால் பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக் கொள்ளாது. ஞான சூர்யராகிய ஹறிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிறார்கள். அந்தக் களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பி எல்லோரும் இன்புற வேண்டி குண கர்மங்களால் வர்ணநிச்சயம் செய்து கொண்டு பூமண்டலத்துக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்கள் எல்லோரும் ஹிந்துக்களை கை துாக்கிவிடப் புறப்பட்டிருக்கிறார்கள். பரமாத்மா ஒன்று. அவனுக்கு ரிஷிகள் பல பெயர் சொல்லிப் போற்றுகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது.