பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் =gpStus=ESS====. சீனிவாசன் 129

நடத்தினால் நாளை நம்மையேனும் நம்முடைய மக்களையேனும் பிறர் அடிமையாக நடத்துவார்கள். ஹிந்துக்கள் சட்டத்தை உடைக்காமல், இரவிலும், பகலிலும் விழிப்பிலும் துக்கத்திலும் கனவிலும் எப்போதும் ஸ்வராஜ்யத்திற்குப் பாடுபட வேண்டும். விடுதலையில்லாதவர் எப்போதும் துன்பப்படுவார்கள். இது போன்ற விஷயங்களை ஊரூராகப் போய் உபந்யாசம் செய்தால் என்ன? தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் இந்தக் காரியம் செய்யக் காத்திருக்கிறேன்” என்று இராகவ சாஸ்திரி சொன்னார்.

எளிய சொற்களில் வலுவான அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களை பாரதி தெளிவாகத் தனது உரை நடையில் எடுத்துக் கூறுகிறார். பாரதியின் கருத்தில் சுதந்திரம் என்றால் அங்குயாரும் அடிமையில்லை. அங்கு ஜாதி கிடையாது. ஆனும், பெண்ணும் சமம். சட்டத்தை உடைக்காமல் அமைதியான வழியில் சுதந்திரப் போராட்டம் நடை பெற வேண்டும். இந்தக் கருத்தை மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி அவர்களிடம் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்த உரையாடலில் இராமராயர் குறுக்கிட்டு, “காளிதாஸர் சக்தி உபாசனை செய்து கொண்டிருக்கிறார். அரசியல் விவகாரங்களை சென்னையிலும் இதர நகரங்களிலும் உள்ள புகழ் பெற்ற ஜனத்தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய்த் தெரிந்து கொள்ளும்” என்று கூறினார். இராகவ சாஸ்திரி அதில் திருப்தி அடையாமல் காளிதாஸரிடம்,” எனக்கு என்ன உத்தரவு என்று திரும்பவும் கேட்டார் அதற்குக் காளிதாஸர் கூறுகிறார்.

“கேளிர், இராகவ சாஸ்திரியாரே, சட்டத்திற்கு விரோத மில்லாமல் நீர் சுதேசியம் பேசுவதிலும் மற்றபடி சமத்துவம் விடுதலை