பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் ppре =-geomusé-Gégé ost-e. சீனிவாசன் 137

சுவர்கள் இடிந்து போய் ஜகமே அழிந்து விடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப் படுத்தி ஆள்வோருடைய சம்பிரதாயம்” என்று குறிப்பிடுகிறார். அத்துடன் மற்றொரு வேடிக்கையான உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்.

“மதராஸ் மெயில்” போன்ற ஆங்கிலேயப் பத்திராதிபரிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். “ஒ ஹோ! ஹோ! ஹோ ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ரஜபுத்திரர்களைக் கொல்வார்கள். பிறகு ரஜபுத்திரர்கள் மஹாராஷ்டிரர்களின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால் மகாராஷ்டிரர் தெலுங்கரையும், கன்னடரையும் மலையாளிகளையும் தின்று விடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும் சூரணமாக்கி விடுவார்கள். சூரணித்த திராவிடர் வங்காளிகளின் எலும்புகளை மாலையாகப் புனைவர்” என்று சொல்லி பெருமூச்சு விடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப் பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள். “அப்படிப் பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொருக்கத்திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும். அவ்வளவு தான்” என்று சொல்லுவார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தால் இந்த நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறி விட்டால் இந்த நாட்டில் குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வெட்டிக் குவித்துக் கொள்வார்கள் என்று ஆங்கிலேயர்களும் ஆங்கிலேய ஆட்சியின் ஆதரவாளர்களும் அன்று பேசியதையே பாரதி சிலேடையாக மதராஸ் மெயில் பத்திரிகையைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். மதராஸ் மெயில் என்னும் பெயரில் அக்காலத்தில் சென்னையிலிருந்து ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆங்கிலேயர்களால் துவக்கப் பட்டு ஆங்கிலேய