பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பதிவிரதை- பெண்ணுரிமை 135

18.பதிவிரதை - பெண்ணுரிமை:

பதிவிரதை என்னும் தலைப்பில் பாரதியார் ஒரு சிறந்த கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பெண்களின் சம உரிமை பற்றிக் கவிஞர் பேசுகிறார்.

இந்தக் காலத்தில் பல பொய்கள் இடரிப் போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைபடுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள். இந்தக் காலத்தில் யாருக்கும் பயந்து நாம் நமக்குத்

தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கக் கூடாது” என்றும்,

சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜபக்தி செலுத்த வேண்டும் என்றும் அங்ங்ணம் பக்தி செய்யாவிட்டால் சிறைச் சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.

அந்த அரசு போலே தான் ஸ்திரீகள் மீது புருஷர் செய்யும் கட்டாய ஆட்சியும் என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளங்கும். கட்டாயப் படுத்தி என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா? என்று பாரதியார் குறிப்பிடுகிறார். இதில் அன்னிய ஆட்சியை மறைமுகமாகக் கண்டிக்கும் செய்கையும் ஆண்களின் ஆதிக்கத்தைக் கண்டிக்கும் செய்கையும் இணைந்து அடங்கி இருப்பதைக் காண்கிறோம்.

பெண்கள் விடுதலை என்னும் தலைப்பிலான இரண்டாவது கட்டுரையில் பாரதி தனது நுட்பமான இலை மறைவு காயான அரசியல் கருத்துக்களை வெளியிடுகிறார். அவை வருமாறு

“அடிமைகள் யாராயினும் அவர்களுக்கு விடுதலை கொடுத்தால் அதனின்று யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு அண்டச்