பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. g0pg.ru oĝigomo 140

19.சமுதாய ஒற்றுமை:

நமது நாட்டில் கிறிஸ்தவ மிஷனரியார் பல இடங்களிலும் தங்கள் மத நிறுவனங்களை அமைத்து மாதாகோவில்களைக் கட்டினார்கள். அத்துடன் சேர்ந்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினார்கள். இது ஆங்கிலேயர் ஆட்சியுடன் சேர்ந்து நடந்த நிகழ்ச்சிகளாகும். இந்தக் கல்வியில் அவர்கள் மெக்காலே வகுத்த பாடத்திட்டங்களை செயல் படுத்தினார்கள். நமது நாட்டின் படித்தவர்களிடம் ஆங்கிலேய சிந்தனையை வளர்ப்பதே இந்தக் கல்வித் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது.

பாரதி தனது உரைநடையில் எழுதியுள்ள ஒரு கதையில் கதாநாயகன் கூறுகிறான். “நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னை கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். வேதகாலம் முதலாக இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகள் எல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜூனனும் காளிதாசனும் சங்கராச்சாரியாரும் சிவாஜியும் ராமதாசரும் கபீர்தாஸ்ரும் அதற்கு முன்னும் பின்னும் நேற்று வரையிருந்த பாரத தேசத்தார் அனைவரும், அவர்கள் நெஞ்சில் வளர்த்து வந்த பக்தியெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள் என்பது முதலான ஆங்கிலேய சத்தியங்கள் எல்லாம் என் உள்ளத்திலே குடி புகுந்து விட்டன. ஆனால் கிறிஸ்தவ பாதிரி ஒர் வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதமை என்று ருஜுப் படுத்திக் கொண்டு வரும் போதே அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து விடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விவகாரங்கள் எழுதிப் படிப்பவர்களுக்கு நான் தலை நோவு உண்டாக்கப் போவதில்லை. சுருக்கம் நான் எனது பூர்வ மதாச் சாரங்களில் பற்று நீங்கி ஞானஸ்நானம் பெறவில்லை. பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொண்டேன்” என்று கூறுகிறார்.