பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTyL LLLLLL Ly TCLy LLTCL LLCCLLLLLLLSK SLLLLLS S00

இளைஞர்களின் உள்ளங்களில் ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றி தப்பெண்ணம் உண்டாவதற்கு எவ்வாறு அன்னிய ஆட்சியாளர்களுடைய கல்வி பிரச்சாரம் இருந்தது என்பதற்கு இந்தச் செய்தி சாட்சியமாக அமைந்துள்ளது.

அந்தக் கதையில் அந்த இளைஞன் மேலும் பேசுகிறான். "ஆம், பாரத தேசத்தை இப்பொழுது பிரம்மச்சாரிகளே ரகூவிக்க வேண்டும். மிகவும் உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்து போய் விட்டது. இமயமலை இருந்த இடத்தில் முட் செடிகளும் விஷப் பூச்சிகளும் நிறைந்து ஒரு பாழுங்காடு இருப்பது போல் ஆயிவிட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதை பிரம்மச்சாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாக வேனும் பிறவாமல் நம்போன்ற சாதாரண குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்து கொண்டால் இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப் போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பது போல இந்த நரிக் கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தை சுமத்தும் போது அவனுக்குக் கண் பிதுங்கிப் போகிறது. அவனவனுடைய அற்பகாரியங்கள் முடிவு பெறுவதே பகீரதப் பிரயத்தனம் ஆய்விடுகிறது. தேச காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள். பிரம்மச்சாரிகள் வேண்டும். ஆத்ம ஞானிகள் வேண்டும். தம் பொருட்டு உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்த சுதேசியம் கேவலம் ஒரு லெளகீக காரியமன்று. இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மயோகித் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரம்மசரிய விரதத்தைக் கைக் கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன்” என்று கூறுகிறான். இதில் பாரதியின் உட் கருத்து தெளிவாகத் தென்படுகிறது.