பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. 17llTпшsomтвот штff? 17B

கெளதம ரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்” என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறான். இப்படியே வைசியத் தொழில், சூத்திரத் தொழில் என்ற கெளரவத் தொழில்கள் செய்வோரும் இவற்றிற்குப் புறம்பான புலைத் தொழில்கள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாக உள்ள பெருமையை மறந்து விட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்.

நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்ப்ை பற்றி என்ன அபிப்ராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும்.

வஜ்ரஸூசி உபநிஷத்து பின்வருமாறு:

ஞானமற்றவர்களுக்கு துாஷணமாகவும் ஞானக்கண் உடையவருக்குப் பூஷணமாகவும் விளங்குவதும் அஞ்ஞானத்தை உடைப்பது மாகிய 'வஜ்ரஸூசி” என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன்.

பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்பது பரிசோதிக்கத் தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். அங்ங்னம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத்தையா? பிறப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம குணத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணன் என்றால் அஃதன்று. முன் இறந்தனவும், இனி வருவனவும், இப்போது உள்ளனவும் ஆகிய உடல்களில் எல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்கை வசத்தால், பலவித உடல்கள் உண்டாகும் போது எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருக்கின்றது. ஆகையால் (அவனுடைய) ஜீவன் பிராமணனாக