பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. sī£i ognificir elfbeug umiiliteoen eilenou 182

28.எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை:

எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை என்னும் கட்டுரையில் பாரதி எழுதுகிறார்.

“நமது தேசத்தில் வறுமை அதிகம். முன்னேயிருந்தவர்களின் கோழைத்தன்மை, ஒற்றுமைக் குறைவு, சாஸ்திர ஞானமின்மை, பல தேச விவகாரங்கள் தெரியாமை, மூடகர்வங்கள் முதலியவற்றால் லகூதிமியை இழந்தோம். மேற்படி குணங்கள் இன்னும் நம்மை விட்டு நன்றாக நீங்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு முக்காலணா வரும்படியென்று கணக்காளிகள் சொல்லுகிறார்கள். அதாவது நரகத்துன்பம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை.

இந்த நிலையில் நமக்குள்ளே பலர் பலவிதமான இகழ்ந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. மிகுந்த செல்வமுடைய நாடுகளிலே கூட மனிதர் பணத்திற்காக எத்தனையோ மானம் கெட்ட காரியங்கள் செய்கிறார்கள். ஏழை தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன் பிழைப்பதே பெரியகாரியம்.

“பணம், பொதுக்கல்வி, விடுதலை மூன்றும் இல்லாவிட்டால் அந்த நாட்டில் மானமேது?’ என்று பாரதி மிகுந்த கவலையுடன் அன்னிய ஆட்சியால் நாட்டில் ஏற்பட்டிருந்த அவல நிலையை எடுத்துக் காட்டி எழுதுகிறார்.

பாரதி இந்தக் கட்டுரையில் கூர்மையான சில சொற்களில் வரதட்சணைக் கொடுமையைப் பற்றிக் கடுமையாக எடுத்துக் கூறுகிறார்.

“மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்ணின் பெற்றோர் செய்வது சாதாரணமேயாகும். ஆனால் மாப்பிள்ளை -களுக்கு விலைத் தரங்கள் போட்டு இன்ன பரீட்சை தேரினவனுக்கு